The Indian Times

முதல் திருமண நாளில் அப்பா ஆகப்போவதை அறிவித்த CWC புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.வாய்ப்பு தேடி சினிமாவில் இவர் அலையாத இடம் இல்லை,இறுதியாக விஜய் தொலைக்காட்சி இவரை அரவணைத்தது.கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி தன்னால் முடிந்த வரை மக்களை மகிழ்வித்தார்.முதலில் கூட்டத்தில் ஒருவனாய் வந்துகொண்டிருந்த புகழ் பின்னர் படிப்படியாக முன்னேறி தனியாக தெரிய தொடங்கினார்.

Advertisement

தனது கடின உழைப்பினை தொடர்ந்து போட்டு வந்த புகழுக்கு தற்போது சினிமாவில் நல்ல இடம் கிடைத்துள்ளது.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

Advertisement

இந்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது,இதன்மூலம் மக்களிடம் பேராதரவினை பெற்று இன்று சினிமாவில் கலக்கி வருகிறார்.மேலும் கதாநாயகனாக ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படி படிப்படியாக வளர்ந்து வருகிறார் புகழ், தற்போது இன்று முதல் திருமண நாளை கொண்டாடிய புகழ் அப்பாவாக போவதை இன்று புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in