The Indian Times

எதிர்நீச்சல் சீரியலின் 500வது எபிசோடை கொண்டாடிய படக்குழு

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி இந்த எதிர்நீச்சல் சீரியலில் திருச்செல்வமும் முக்கியாகதாபாத்தில் நடித்துள்ளார் மேலும் முக்கியமாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் நாடகத்தில் பேசும் பேச்சுக்கள் வசனங்கள் தான் அன்று இணையத்தில் மீம்ஸ்கள் என்று சொல்லலாம்.இந்த நாடகம் தற்போது விறுவிறுப்பாக ஓடி வருகிறது.

Advertisement

இந்த சீரியல் தற்போது 500வது எபிசோடை எட்டி இருக்கிறது.இதனை படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்,இந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in