படையப்பா நீலாம்பரி போல் காரில் இருந்து கெத்தாக இறங்கிய CWC சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

படையப்பா நீலாம்பரி போல் காரில் இருந்து கெத்தாக இறங்கிய CWC சிவாங்கி 1

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.இவர் அங்கு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு செட்டில் கலாட்டா செய்து வருகிறார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

படையப்பா நீலாம்பரி போல் காரில் இருந்து கெத்தாக இறங்கிய CWC சிவாங்கி 2

விளம்பரம்

சிவகார்திகேயனனின் டான் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிய இவர் இப்படத்தில் கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.தற்போது சிவாங்கி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.வீடியோவில் சிவாங்கி கெத்தாக காரில் இருந்து இறங்கி வந்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடடே ஸ்டைலில் பட்டையை கிளப்புறீங்களே என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment