The Indian Times

பாசத்தில் விஜயின் கன்னத்தை கிள்ளிய ரசிகர்… உடனே கார் கண்ணாடியை மூடிய விஜய்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார்.வாரிசு என இப்படத்திர்ற்கு படக்குழு பெயரிட்டுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.அண்மையில் இப்படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

இன்று தளபதி விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்துள்ளார்.விஜயின் வருகை அறிந்து ரசிகர்கள் அங்கு கூடினர்.அங்கு மீட்டிங் முடிந்ததும் விஜய் காரில் வீடு திரும்பினார்.செல்லும் வழியில் அவரை பார்க்க ஆசைப்பட்டு நின்றுகொண்டிருந்த ரசிகர்களுக்கு காரில் இருந்து டாடா காட்டி கொண்டிருக்கையில் ரசிகர் ஒருவர் விஜயின் கன்னத்தினை கிள்ளி முத்தமிட்டுள்ளார்,உடனே விஜய் கார் கண்ணாடியை மூடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

Embed video credits : Polimer news

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in