தமிழ் நடிகர்கள் யாரும் செய்யாத சாதனை.! ட்விட்டரில் நிகழ்த்தி காட்டிய தனுஷ்.! என்ன சேதின்னு தெரியுமா?

கோலிவுட்டில் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று ஹாலிவுட் வரை சென்று அசத்தி வருபவர் நடிகர் தனுஷ். பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனான இவர், ஆரம்பத்தில் நடிக்க வந்த பொழுது உருவ கேலி செய்யப்பட்டார். ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பு மற்றும் நடிப்பு திறமையால் என்று தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. வரிசையாக இவர் வாத்தி, நானே வருவேன் போன்ற அடுத்த அடுத்த படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இதில் வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

தமிழ் நடிகர்கள் யாரும் செய்யாத சாதனை.! ட்விட்டரில் நிகழ்த்தி காட்டிய தனுஷ்.! என்ன சேதின்னு தெரியுமா? 1

விளம்பரம்

நானே வருவேன் படத்தை தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் இருந்து சில பாடல்கள் வெளியாகியிருக்கிறது. படம் இந்த மாதம் 29ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படம் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் குறித்த தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது. அதில் ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் தனுஷ் ஆக்டிவாகவே காணப்படுகிறார். தன்னுடைய படங்கள் குறித்து அப்டேட்டுகள், மற்ற நடிகர்களின் படங்களுக்கான வாழ்த்துக்கள், டீசரை ஷேர் செய்வது, ட்ரைலரை ஷேர் செய்வது போன்று தொடர்ந்து செய்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

தமிழ் நடிகர்கள் யாரும் செய்யாத சாதனை.! ட்விட்டரில் நிகழ்த்தி காட்டிய தனுஷ்.! என்ன சேதின்னு தெரியுமா? 2

விளம்பரம்

தன்னுடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் ஆல்பத்தை கூட இவர் twitter இல் ஷேர் செய்து ‘வாழ்த்துக்கள் தோழி’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ட்விட்டரில் தனுஷை பாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கை 11 மில்லியனை தாண்டி உள்ளது. இதன் மூலம் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட தமிழ் நடிகர் என்ற பெருமை தனுஷிற்கு கிடைத்துள்ளது. முன்னணி நடிகர்களுக்கு கூட குறைந்த அளவே பாலோவர்ஸ் இருக்கிறார்கள். குறிப்பாக சூர்யாவிற்கு 8.1 மில்லியன் பாலோவர்ஸ் பெற்று இரண்டாவது இடத்திலும், ஜி வி பிரகாஷ் 6.4 மில்லியன் பாலோவர்ஸ்களை பெற்று மூன்றாவது இடத்திலும், நடிகர் கார்த்தி 2.7 மில்லியன் பாலோர்களையும் பெற்று இருக்கிறார்கள். சிம்புவிற்கு ஆறு மில்லியன் பாலோவர்ஸ் இருக்கிறார்கள்.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

தமிழ் நடிகர்கள் யாரும் செய்யாத சாதனை.! ட்விட்டரில் நிகழ்த்தி காட்டிய தனுஷ்.! என்ன சேதின்னு தெரியுமா? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment