The Indian Times

போலீஸ் அதிகாரியாக மிரட்டி எடுத்துள்ள அருண் விஜய். சினம் படத்தின் Sneak Peak காட்சிகள்

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள சினம் திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் போலீஸ் எஸ்ஐ ஆக அருண் விஜய் நடித்துள்ளார். எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய். அந்த வகையில் தற்போது போலீஸ் அதிகாரியாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படத்தை ஜி என் ஆர் குமரவேலன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கின. ஆனால் பட வேலைகள் முடிவடைந்தும் வெளியாகாமலே இருந்து வந்தது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை அருண் விஜயின் தந்தை விஜயகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த படத்திற்கு ஷமீர் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பாலக் லால்வாணி கதாநாயகியாக நடித்துள்ளார். படம் வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதி சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாக இருப்பதால், அடுத்த நாள் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அருண் விஜய் கடைசியாக நடித்து முடித்த படம் யானை. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. அடுத்தபடியாக அவர் ஓடிடி தளத்தில் வெளியாகும் வகையில் தமிழ் ராக்கர்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து மூன்றாவதாக தற்போது சினம் படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து மூன்று படங்கள் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள இந்த படத்தில் இருந்து சில காட்சிகள் வெளியாகி இருக்கிறது. போலீஸ் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அருண் விஜய் மீண்டும் பணியில் சேர்வது போன்ற சில காட்சிகள் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த காட்சிகளை காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: Moviebuff Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in