The Indian Times

தளபதி உங்களுக்கு வயசே ஆகாதா…வாரிசு படப்பிடிப்பில் வெளியாகிய தளபதி விஜய் புகைப்படம்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.

Advertisement

அண்மையில் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் தனது அடுத்த படத்தில் உஷாராக நடித்து வருகிறார் விஜய்.இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார்.வாரிசு என இப்படத்திர்ற்கு படக்குழு பெயரிட்டுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.அண்மையில் இப்படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை ராஷ்மிக்கா மந்தனா தளபதி விஜய் உடன் புகைப்படம் எடுத்துள்ளார்.வாரிசு படத்தில் உள்ள கெட்டப்பில் தளபதி விஜய் கியூட் ஆக உள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்களிடம் இந்த புகைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் தளபதிக்கு வயசே ஆகாதா என கேள்வி எழுப்பி புகைப்படத்தினை ஷேர் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in