மாமன்னன் படக்குழுவுடன் பிறந்தநாளை கொண்டாடிய வடிவேலு

நடிகர் வடிவேலுவை தெரியாதவர்கள் தமிழகத்தில் எவரும் இருக்க முடியாது. அந்தளவிற்கு மக்கள் மனதில் நிறைந்துள்ளார் வடிவேலு.இவரின் நகைச்சுவைகள் தான் பலருக்கும் மருந்தாகி வருகிறது. இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே சினிமாவில் உள்ளது.காரணம் தனது எதார்த்தமான பேச்சு மற்றும் ஆக்ஷன்களால் மக்களை சிரிக்கவைப்பதில் இவர் வல்லவர் என்பதால்.தற்போது பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் இன்று வரை வடிவேலு இடத்தினை பிடித்தவர்கள் எவரும் இல்லை.நகைச்சுவையின் நிரந்தர புலிகேசி மன்னனாக இன்று உள்ளார்.அவர் படங்களில் நடித்தாலும் சரி நடிக்கவில்லை என்றாலும் சரி அவருக்கான இடம் தனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

மாமன்னன் படக்குழுவுடன் பிறந்தநாளை கொண்டாடிய வடிவேலு 1

விளம்பரம்

என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தற்போது சில ஆண்டுகளாக இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுக்கு இடையே இருந்த பிரச்சனைகளினால் படங்கள் நடிக்காமல் இருந்தார்.தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

மாமன்னன் படக்குழுவுடன் பிறந்தநாளை கொண்டாடிய வடிவேலு 2

விளம்பரம்

இன்று வடிவேலு பிறந்தநாள்.ரசிகர்கள் வடிவேலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் முக்கியாகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படக்குழுவினருடன் கேக் வெட்டி வடிவேலு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment