The Indian Times

என் குலம் செழிக்க வந்தவள் நீ..மனைவிக்கு கவிதையை பொழியும் ரவீந்தர்

தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரம் ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்துபவர் மகாலக்ஷ்மி.இவர் முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

Advertisement

தற்போது நடிகை மகாலட்சுமி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திடீர் திருமணம் ரசிகர்ளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லிப்ரா ப்ரொடக்சன் தயாரித்த கட்சி படம் சாந்தனு நடிப்பில் வெளியாகிய முருங்கைக்காய் சிப்ஸ்.இப்படத்திற்கு பிறகு தற்போது ரவீந்தர் எந்த தயாரிப்பு பக்கமும் செல்லவில்லை.விரைவில் மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தற்போது மனைவியுடன் சேர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுள்ளார்.அங்கு எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு மனைவிக்காக கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.என்னுடைய குலம் செழிக்க வந்தவள் நீ,இனி துவங்கலாம் குல தெய்வத்தின் அருளோடு,நம்மை நேசிக்கும் உள்ளங்களுக்கு நன்றி,நம்மை வெறுக்கும் உலகத்துக்கு மிக்க நன்றி,ஒரு நாள் உங்களை நாங்கள் நேசிக்க வைப்போம் என பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in