The Indian Times

விக்ரம் பிரபுவின் தங்கையை கரம்பிடித்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்… திருமண புகைப்படங்கள்

த்ரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் சிம்புவை வைத்து இயக்கிய AAA படம் பெரும் சரிவை இவருக்கு சினிமாவில் கொடுத்தது

Advertisement

இதன்பின் நீண்ட ஆண்டுகள் ஆக படம் இயக்காமல் இருந்த இவர் தற்போது மீண்டும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி வருகிறார்

அப்படி அண்மையில் விஷால் நடிப்பில் இவருக்கு வெளியான மார்க் ஆண்டனி படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது

மேலும் வசூலையும் வாரி குவித்தது

இப்படத்திற்கு பிறகு ஆதிக் குடும்பங்கள் பார்க்கும்படி தான் படங்களை இயக்க உள்ளார்.

இந்நிலையில் இன்று இவர் நடிகர் பிரபுவின் மகளை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Advertisement

இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.பல நட்சத்திரங்கள் அவருக்கு நேரில் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in