The Indian Times

இயக்குனர் நெல்சனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

பெரிய தடைகளுக்கு பிறகு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர் நெல்சன் திலீப்குமார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார்.மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து இயக்குவதில் வல்லவர் என்று ரசிகர்களிடமே நல்ல பெயரினை பெற்றவர்.

முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற பெருமையை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற வெற்றிப்படத்தினை கொடுத்தார் நெல்சன்.இப்படம் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

Advertisement

இந்நிலையில் தான் சன் பிக்சர் தயாரிப்பில் தளபதி விஜயை வைத்து இயக்க வாய்ப்பு நெல்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது.இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே,விடிவி கணேஷ்,அபர்ணா தாஸ், செல்வராகவன், என பெரும் நடிகர்கள் கூட்டமே நடித்தது.

பல கோடிகளில் மால் போன்ற செட்டப்புகள் அமைக்கப்பட்டு பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியது.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தினை தொடர்ந்து இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை விஜய் ரசிகர்கள் வைத்திருந்தனர்.இருந்தாலும் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தினை இயக்கி வருகிறார்.இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது படக்குழு.படப்பிடிப்பில் நெல்சன் வெறித்தனமாக கடுமையாக உழைத்து வருவதை காண முடிகின்றது

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in