The Indian Times

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த சோகம்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் நாடகத்தில் பேசும் பேச்சுக்கள் வசனங்கள் தான் அன்று இணையத்தில் மீம்ஸ்கள் என்று சொல்லலாம்.இவர் அண்மையில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரமான நந்தினியாக நடித்து வருபவர் ஹரி பிரியா, இவர் தற்போது உடல் முடியாமல் மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளார்.இதனை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் மீண்டு வரவேண்டும் என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.மேலும் அவர் தற்போது நலமாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in