கல்யாணம் நடக்க போற சந்தோஷத்துல கண்ணம்மா பொண்ணுங்களோட வெண்பா போடுற ஆட்டத்தை பாருங்க

சின்னத்திரையில் முதல்முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வில்லியாக நடித்துஅறிமுகம் ஆகியவர் பரீனா. இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்தது.முதல் நாடகத்திலேயே அதுவும் வில்லியாக நடித்தே பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.கதாநாயகியாக நடிப்பது தான் எளிது வில்லியாக சீரியல்களில் நடிப்பது தான் கஷ்டம் அதனை தனது முதல் நாடகத்திலேயே நடித்து அசத்தி விட்டார்.கதாநாயகிகளை தான் மக்களுக்கு பிடிக்கும் என்பதை மாற்றி வில்லிகளையும் பிடிக்க வைத்தார் பரீனா.அந்தளவிற்கு தனது நடிப்பினை இந்த நாடகத்தில் வெளிப்படுத்தியுள்ள்ளார்.பரீனா சீரியலுக்கு வருவதற்கு முன் முன்னதாக மாடலிங் துறையில் இருந்தவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

கல்யாணம் நடக்க போற சந்தோஷத்துல கண்ணம்மா பொண்ணுங்களோட வெண்பா போடுற ஆட்டத்தை பாருங்க 1

விளம்பரம்

சின்னத்திரையில் இவர் நடிகையாக மட்டுமில்லாமல் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் பல நாடகங்களில் நடித்தாலும் இவர் பாரதி கண்ணம்மாவில் நடித்த வெண்பா கதாபாத்திரம் தான் இவருக்கு அங்கீகாரத்தினை அளித்தது.இன்னும் இவருக்கு மக்கள் வரவேற்பினை வழங்கி தான் வருகின்றனர்.இவருக்கு திருமணம் ஆகி அழகிய ஆண் குழந்தை உள்ளது.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுது ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர்.இதனால் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே ஒரு கூட்டம் உள்ளது.இவர் வெளியிடும் வீடியோவை இவரது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வைரலாக்குவது இயல்பான ஒன்றாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

கல்யாணம் நடக்க போற சந்தோஷத்துல கண்ணம்மா பொண்ணுங்களோட வெண்பா போடுற ஆட்டத்தை பாருங்க 2

விளம்பரம்

தற்போது பாரதிகண்ணம்மா இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்த ஷூட்டிங்கில் கண்ணம்மா இரண்டு மகள்களுடனும் பரீனா கலக்கல் ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்கள் இவரின் நடனத்தினை பாராட்டியும் மேலும் உங்களது நாடகம் முடிந்தால் போர் அடித்துவிடும் என கூறியும் வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment