The Indian Times

சூரி சசிகுமார் மிரட்டும் கருடன் பட ட்ரைலர் இதோ

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என கலக்கி வருபவர் சசிகுமார்.இவரது படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.இவருக்கென சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் இயக்கத்தில் வெளியாகிய சுப்ரமணியபுரம் படத்திற்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள சசிகுமார் தற்போது இயக்குனர் வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நடிகராக மட்டும் படங்களில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடிகராக நடிக்கும் படங்களும் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெறுவதால் சரி இதனையே தொடர்ச்சியாக சில காலங்கள் செய்வோம் என தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் நடிப்பில் உருவாகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துகொண்டு இருக்கிறது.அண்மையில் இவருக்கு வெளியாகிய கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் ராஜவம்சம் போன்ற படங்கள் மிக பெரிய தோல்வியை அளித்தன.இருந்தும் முயற்சியை கைவிடாமல் நல்ல கதைகளை கேட்டு படம் நடித்து வருகிறார் சசிகுமார்.

Advertisement

இவர் தற்போது இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி உடன் கருடன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in