The Indian Times

மாரிமுத்து இரங்கல் பதிவில் திட்டிய ரசிகர்களால் காண்டாகி கிழித்தெடுத்த ஜிபி முத்து

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து,நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertisement

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர்.மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்.ஆனால் ஜிபி முத்து குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது என வெளியே கிளம்பிவிட்டார்

Advertisement

தற்போது இவர் நடிகர் மாரிமுத்து மறைவிற்கு இரங்கல் பதிவு பதிவிட்டுள்ளார் அதில் சில ரசிகர்கள் வந்து ஜிபி முத்துவை திட்டியதால் ஆத்திரமடைந்த அவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Embed Video credits : BEHINDWOODS AIR

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in