The Indian Times

ஒரே நாளில் BOX OFFICE-யை உடைத்தெறிந்த ஜவான் கலெக்சன்… எத்தனை கோடிகள் தெரியுமா?

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லீ.பின்னர் இயக்குனர் தொழில் என்ன என்பதை கற்றுக்கொண்டு களம் இறங்கினார் .ஆர்யா,நயன்தாரா,ஜெய் மற்றும் நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அட்லீ.இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன்கூட்டணி சேர்ந்தார் அட்லீ.

Advertisement

தெறி,மெர்சல்,பிகில் என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே அலற விட்டார்.இந்த வெற்றிக்கு பிறகு சிறிது நாட்கள் ஓய்வெடுத் அட்லீ மீண்டும் மிரட்டலான திரை கதையுடன் ஷாருக்கானை சந்தித்துள்ளார்.அவரிடம் கதை கூறவே கதை பிடித்துப்போன ஷாருக்கான் நடிக்க ஒப்புக்கொண்டார்.படப்பிடிப்பு வேலைகள் உடனே தொடங்கப்பட்டது.ஆனால் கொரோனா நிலவரம் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டு வந்த நிலையில் தற்போது படம் முழுவதும் முடிந்து நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தாலும் இப்படம் கலவையான விமர்சனங்களையே ரசிகர்களிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் வசூலில் பெருமளவில் சாதனை படைத்துள்ளது.வெளியாகிய முதல் நாள் உலகம் முழுவதும் 129.6 கோடிகளை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in