The Indian Times

அப்பா இந்த BIKE உனக்குத்தான்… அப்பாவுக்கு புது பைக் வாங்கி கொடுத்து அழகுபார்த்த GP முத்து

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்இந்நிலையில் குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது,எனக்கு வீட்டுக்கு போனும் என் மகனை பாக்கணும் என்னால இங்க இருக்க முடியாது என்று கூறவே கமல் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிக்கொண்டு வந்தார்.

Advertisement

தற்போது விஜய் தொலைக்காட்சியில் கோமாளியாக வந்து கலக்கி வருகிறார்.மேலும் படங்களிலும் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தனது தந்தைக்கு புதிய பைக் வாங்கி கொடுத்துள்ளார்.தந்தை வைத்திருந்த பைக் பழைய பைக் ஆகிவிட்டது என்பதால் தந்தைக்கு புதிய பைக் வாங்கி கொடுத்து அதனை ஓட்டவைத்து அழகு பார்த்தும் மகிழ்ந்துள்ளார் ஜிபி முத்து.இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜிபி முத்து.ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களையும் அப்பா மேல் உள்ள பாசத்தையும் பாராட்டி வருகின்றனர்.

Embed video credits : GPMUTHU OFFICIAL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in