The Indian Times

நடிகர் கஞ்சா கருப்புவின் திருமண புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கஞ்சா கருப்பு.இவர் முதல் முறையாக சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பிதாமகன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.

அதன்பின்னர் ராம் திரைப்படத்தில் வாழவந்தான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றார்.தனது பேச்சு மற்றும் உடல் பாவனைகளில் பலரையும் கவர்ந்து முன்னணி நகைச்சுவை நடிககைராக உருவெடுத்தார்.

Advertisement

பல முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் கஞ்சா கருப்பு.மேலும் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு அங்கும் பட்டையை கிளப்பினார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களை சிறப்பாக என்டெர்டெய்ன்மெண்ட் செய்தற்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது.

இவர் சொந்தமாக படம் ஒன்றை தயாரித்து நடித்திருந்தார்.இப்படம் பெரும் தோல்வியை சந்தித்து கஞ்சா கருப்பு கடனுக்கு உள்ளாகினார்.இதனால் இவர் சொந்த வீட்டையே விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

தற்போது படவாய்ப்புகள் கஞ்சா கருப்புக்கு சரிவர அமைவதில்லை என்பதால் கிடைக்கும் படங்களில் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா கருப்பை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்க்காமல் மிகுந்த கவலையில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கஞ்சா கருப்பு நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் சங்கீதா என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்,இவர் ஒரு மருத்துவர் ஆவார்.இருவரும் தங்களது வாழ்க்கையை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.கஞ்சா கருப்புவின் திருமண புகைப்படங்களை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in