The Indian Times

படப்பிடிப்பில் பயங்கர லூட்டி அடிக்கும் மன்சூர் அலிகான்….

தமிழ் சினிமாவை 90களில் மிரட்டிய பிரபல வில்லன் மன்சூர் அலிகான்.எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்யக்கூடியவர் இவர்.சுபயாத்ரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் நடிகர் மன்சூர் அலிகான்.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய வேலை கிடைச்சிருச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இவரது நடிப்பு தனி கவனத்தினை மக்களிடம் பெறவே நடிகர் விஜயகாந்த் நடிக்கும் கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி வீரபத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இதனை தொடர்ந்து வில்லனாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.மேலும் மலையாளம் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் மன்சூர் அலிகான்.இவர் அடிக்கடி செய்யும் குறும்புத்தனமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வந்தது.இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மிகவும் பிடித்த நடிகர் மன்சூர் அலிகான்.அவரது இயற்கையான வில்லன் கலந்த குறும்பு செயல்கள் இவரது ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.லோகேஷ் இயக்கிய கைதி படத்தின் கதை முதலில் மன்சூர் அலிகானுக்காக உருவாக்கப்பட்டது தான் பின்னர் அவர் நடிக்க முடியாமல் போகவே படம் கார்த்திக்கு சென்றுள்ளது.இவர் குறும்புத்தனமான விஷயங்கள் இணையத்தில் அதிகளவு வைரலாவது உண்டு.

Advertisement

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மன்சூர் லியோ படத்தில் நடித்து வருகிறார்.மேலும் கதாநாயனாக சரக்கு படத்தில் நடித்து வருகிறார்.இப்படப்பிடிப்பில் சக நடிகர்களுடன் இவர் செம்மையாக ஆட்டம் போட்டுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in