The Indian Times

ஹன்சிகா திருமணம் செய்ய இருக்கும் நபர் இவர்தானாம்.. வெளியான புகைப்படம்

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனது வசம் இழுத்து வைத்துள்ளவர். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று வரை சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகை இவர் ஒருவரே .ஆரம்பத்தில் பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு,தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என உடனே ஓகே சொல்லினார்.அதன்படி இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாப்பிளை படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.இப்படத்தின் மூலம் பல மக்களுக்கும் பரிட்சயம் ஆகினார் ஹன்சிகா.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து எங்கேயும் காதல் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது,மேலும் அடுத்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் இவரை தமிழ் சினிமாவின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுக்க தொடங்கினார் ஹன்சிகா.இவர் தற்போது தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.

Advertisement

இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் ஹன்சிகா வெளியிடவில்லை,இந்நிலையில் ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள போகும் நபர் இவர்தான் என ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது,ஹன்சிகாவின் நீண்ட கால நண்பர் மற்றும் பிசினஸ் பார்ட்னர் ஆன Sohail Kathuria என்பவரை தான் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் இவர்கள் திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் வெளியாகியுள்ளது.விரைவில் இதுகுறித்து ஹன்சிகா அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in