தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
விக்ரம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் படத்தினை இயக்க உள்ளது.இப்படத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.விரைவில் அதற்கான அப்டேட் வெளியாகும் என பல முறை அவர் தெரிவித்துள்ளார்.தளபதி படத்தின் பணிக்காக அவர் ட்வீட்டர் விட்டே வெளியே சென்றுவிட்டார்,பட பணிகளில் கவனம் செலுத்த போவதாகவும் இதனால் ட்வீட்டர் பக்கத்தில் வரமாட்டேன் என தெரிவித்து சென்றார்
தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் வேளைகளில் பயங்கர பிசியாக உள்ளார்.இப்படத்திற்கு வில்லனாக நடிக்க நிவின் பாலி மற்றும் ப்ரித்திவிராஜ் ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தையை லோகேஷ் நடத்துவதாக தகவல் வெளியாகி இருந்தது இந்நிலையில் தற்போது விஜய்க்கு வில்லனாக விஷாலை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.தற்போது விஷால் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் லோகேஷ் கனகராஜ் விஷாலை படப்பிடிப்பு சென்று நேரே சந்தித்து பேசியுள்ளார்.இதனால் தளபதி வில்லனாக புரட்சித்தளபதி நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.விரைவில் இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in