The Indian Times

என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா… பெரியவர்களிடம்  ஆசி வாங்கி சென்ற தல அஜித்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.ஏற்கனவே இதுபோல வேதாளம் படத்தில் இவரை உருவ கேலி செய்ததற்கு விவேகம் படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை கதிகலங்க செய்தார் அஜித் அதன்படி தற்போதும் அஜித்குமார் உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

Advertisement

அனைவரையும் நன்கு மதிக்க தெரிந்தவர் அஜித் என்பது பலருக்கும் தெரியும்,அதற்கு உதாரணமாக தற்போது இணையத்தில் அஜித் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.சென்னையில் ஏர்போர்ட்க்கு வந்த அஜித் அங்கு இருக்கும் முதியவர்களிடம் அன்பாக நடந்துகொண்டு புகைப்படம் எடுத்து அவர்களிடம் ஆசியும் வாங்கியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் அஜித்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in