வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஹர்பஜன் சிங் ! வைரல் வீடியோ

ஐ.பி.எல். சீசன் தொடங்கி விட்டதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். போன வருஷம் நடந்த 2020 ஐ.பி.எல் கொரோன பாதிப்பு காரணத்தால் துபாயில் ரசிகர்கள் இல்லாமல் தாமதமாக நடைபெற்றது. இந்த வருஷம் ஐ.பி.எல் தொடரில் ஆரம்ப போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஹர்பஜன் சிங் விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி ஐ.பி.எல் கம்மிங் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஹர்பஜன் சிங் ! வைரல் வீடியோ 1

விளம்பரம்

இதனை ரசிகர்கள் அனைவரும் வைரலாக்கி வருகின்றனர். மாஸ்டர் படம் வெளியாகி பல நாட்கள் கடந்தும் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ள பாடல் வாத்தி கம்மிங். 5 வயதிலிருந்து 50 வயது வரை அனைவரையும் நடனமாட வைக்கும் குத்துப் பாடல் என்றால் அது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் தான். விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் திரைப்படம் எரிதிர்பார்காத அளவுக்கு வசூலை குவித்தது. ஒரு வருடம் கடந்தும் இன்றும் பலர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

விளம்பரம்

சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளனர். தற்போது ஐ.பி.எல் தொடங்கப் போவதை ஒட்டி ஹர்பஜன் வெளியிட்டுள்ள வாத்தி கம்மிங் வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment