6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து அசத்திய இலங்கை அணி வீரர் பெரேரா! வைரல் வீடியோ

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு தேசிய விளையாட்டு இருக்கும் ஆனால் கிரிக்கெட் என்றால் அதற்கு ரசிகர்கள் இல்லாத நாடே இல்லை என்று கூறலாம். சென்ற வருடம் கொரோனா காரணத்தினால் நடக்க இருந்து அணைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது. ஐ.பி.எல் தொடரே ரசிகர்களே இல்லாமல் தாமதமாக தான் நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியா ரசிகர்களுக்கு உருச்சிகமூட்டும் விதமாக அமைந்தது இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான தொடர். அதில் மூன்று தொடரிலும் இந்தியா வெற்றிபெற்றதால் ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். அதுபோக நம் அனைவர்க்கும் பிடித்த 90s கிரிக்கெட் வீரர்கள் விளையாடிய rsws தொடரிலும் இந்தியா லெஜெண்ட்ஸ் வெற்றி பெற்று ரசிகர்களை குஷிப்படுத்தியது.

6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து அசத்திய இலங்கை அணி வீரர் பெரேரா! வைரல் வீடியோ 1

விளம்பரம்

தற்போது இலங்கை ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக இலங்கை அணி வீரர் திசாரா பெரேரா, 6 பாலுக்கு 6 சிக்ஸர் அடித்து அசத்தியள்ளார். இலங்கையில் 50 ஓவர் கொண்ட உள்ளூர் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் Sri Lanka Army Sports Club அணி Bloomfield Cricket and Athletic Club அணியை நேற்று எதிர்கொண்டது. முதலில் விளையாடிய Sri Lanka Army Sports Club அணி 3 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களை முடித்திருந்தது. இந்த அணியின் சார்பாக விளையாடிய இலங்கை வீரர் பெரேரா 6 பாலில் 6 சிக்ஸர் அடித்து 52 ரன்களை குவித்துள்ளார். தற்போது உலக சாதனை பட்டியலில் 6 பாலில் 6 சிக்ஸர் அடித்து இடம்பிடித்த பெரேரா வீடியோ வைரலாகி வருகிறது.

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment