தமிழில் பேசி மாஸ் கட்டிய தல தோனி ! சென்னை சூப்பர் கிங்ஸ் வைரல் வீடியோ

உலகின் மிக சிறந்த டி 20 தொடர் என்றால் அது ஐ.பி.எல் தொடர் தான். கடந்த 2020 ஐ.பி.எல் தொடர் துபாயில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடியாக காணப்படும் மைதானங்களை பார்த்த ரசிகர்களை மிகவும் சோகத்திற்குள்ளாகக்கியது. தற்போது 2021 ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெற போகிறது என்றாலும் ஆரம்பத்தில் சில போட்டிகளுக்கு ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்று பல கட்டுப்பாடுகளுடனே நடக்க இருக்கிறது.

தமிழில் பேசி மாஸ் கட்டிய தல தோனி ! சென்னை சூப்பர் கிங்ஸ் வைரல் வீடியோ 1

விளம்பரம்

ஐ.பி.எல் யில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். தல தோனி இந்த அணியில் இருப்பதாலேயே இந்த அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளானர்.தோனியின் தலைமையில் மூன்று முறை ஐ.பி.எல் தொடரை கைப்பற்றி இருக்கிறது சென்னை அணி. இருந்தாலும் கடந்த 2020 ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி சரியாக பெர்பார்ம் செய்யவில்லை.

விளம்பரம்

போன முறை நடந்த தவறு இந்த முறை நடந்து விடக்கூடாது என்று சென்னை அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அப்படி நாம் தோனி பயிற்சியில் பந்தை சிக்ஸராக தெறிக்க விடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதை தொடர்ந்து தற்போது தோனியின் மற்றுமொரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டி ஷர்ட்டை கையில் பிடித்தவாறு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க என்று தோனி கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு தோனி ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது.

 

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment