இமான் இசைக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது காதலாக இருந்தாலும் சரி,ஆக்ஷனாக இருந்தாலும் சரி இவரது இசை அந்த இடத்தில் நின்று பேசும்.இவர் இசையில் வெளியாகிய பல பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்றுள்ள ஊதாக்கலரு ரிப்பன் என்ற பாடல் உச்ச வரவேற்பை மக்களிடம் பெற்றது.இதுபோன்ற பல புகழ்பெற்ற பாடல்களை மக்களுக்கு கொடுத்துள்ளவர் தான் இமான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் இமான்.இப்படத்தில் நல்ல வரவேற்பு இமானுக்கு கிடைத்தது.அதை தொடர்ந்து இவரது இசையில் வெளியாகிய விசில் படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா பாடல் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க செய்தார்.அன்று தொடர்ந்து இன்று வரை பல முன்னணி பிரபலங்கள் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவரும் நடிகர் சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்கள்
சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.இந்நிலையில் இமான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் எனக்கு மிக பெரிய துரோகம் செய்து விட்டார்,இனி அவர் படங்களுக்கு இசையமைக்கமாட்டேன் ,அவர் செய்த துரோகத்தை என்னால் வெளியே சொல்ல முடியாது எனவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்,
Embed Video Credits : WOW TAMIZHA
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in