The Indian Times

எத்தனை குண்டு போட்டாலும் இந்த ஜப்பானை அழிக்க முடியாதுடா.. ஜப்பான் பட டீசர் வெளியாகியது

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி. தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் நடித்துள்ளனர்,இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் எனும் படம் வெளியாக உள்ளது,ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு,டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : DREAM WARRIOR PICTURES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in