உப்பெண்னா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகியவர் க்ரிதி ஷெட்டி.இதுதான் இவருக்கு முதல் தெலுங்கு படம் ஆகும்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து இவருக்கென தெலுங்கில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களான நானியின் ஷியாம் சிங்கா ராய் மற்றும் நாக சைதன்யாவின் பங்கராஜு படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தெலுங்கு சினிமாவிற்கு புதிய அழகிய நடிகை கிடைத்துள்ளது அங்குள்ள ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து மேலும் பட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் க்ரிதி ஷெட்டி.இவருக்கு தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழில் ரசிகர்கள் உள்ளனர்.தற்போது இவர் ராம் போதினினி கதாநாயகனாக நடித்துள்ள தி வாரியார் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகியது.மேலும் இவர் தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆக உள்ளார்.இந்த படத்திற்கு இவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்
இந்நிலையில் க்ரிதி ஷெட்டி புதிய தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளார்.இதுகுறித்து அவரிடம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது ,ஒருவருட திரைப்பயணம் நல்லபடியாக முடிந்துள்ளது.தற்போது நான் புதியதாக நிஷ்ணா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளேன். எனது பெற்றோர்களின் பெயரை கொண்டு இந்த நிறுவனத்தினை ஆரம்பித்துளேன்.இதன்மூலம் மக்களுக்கு என்ன முடிந்த உதவிகளை செய்வேன் என தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் க்ரிதி ஷெட்டியை பெருமளவு பாராட்டி வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in