The Indian Times

கையில் பை..ஷேர் ஆட்டோவில் ஊரை சுற்றி பார்க்கும் இயக்குனர் கவுதம் மேனன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.பல முன்னணி கதாநாயகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.விண்ணை தாண்டி வருவாயா படத்தினை இயக்கி பல ரசிகர்களாலும் அறியப்பட்டவர் ஆகினார்.அன்று முதல் இன்று வரை கவுதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.2001 ஆம் ஆண்டு நடிகர் மாதவனை வைத்து மின்னலே படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் தடம் பதித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நடிகர் சிம்புவை வைத்து இரண்டாவது முறையாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தினை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.கடந்த வாரம் இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.விமர்சனங்கள் ஒரு பக்கம் கலவையாக பெற்றாலும் வசூலில் அசத்தி வருகிறது வெந்து தணிந்தது காடு என்று தான் கூற வேண்டும். இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கவுதம் மேனன்னுக்கு பைக்கினை பரிசாக வழங்கினார்

Advertisement

தற்போது கவுதம் மேனன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் கையில் பையை தூக்கிக்கொண்டு ஷேர் ஆட்டோவில் ஊர் சுற்றி பார்க்க கிளம்பிவிட்டார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் வீடியோவை லைக் ஷேர் செய்து இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in