The Indian Times

சொன்னதை கேட்டுத்தான் தாளம் போடுறேன்…. அலங்காரப்பொருளில் அசால்ட்டாக இசை உருவாக்கிய உலகநாயகன்

சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார்.களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு படம் நடிப்பையும்,கேரக்டர்களையும் மாற்றி மாற்றி புதிய சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளவர் இவர். தனது கடின உழைப்பினால் இன்று சினிமாவில் தனக்கான நிரந்தர இடத்தினை பிடித்து தனக்கான ரசிகர்களையும் உருவாக்கி ஜாம்பவான் ஆக உள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.இப்படம் விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

Advertisement

தற்போது கமல்ஹாசன் அலங்கார பொருள் ஒன்றில் தாளம் போட்டு இசையமைத்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கமல்.இதனை பார்த்த ரசிகர்கள் அடடே சூப்பர் இதற்குத்தான் இவர் உலகநாயகனாக உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வீடியோவை இன்ஸ்டாகிராமில் வைரல் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in