The Indian Times

இப்போதைக்கு சந்தோஷ் நாராயண் என் படத்துல இல்லை…. சந்தோஷ் நாராயணன் இறங்கி வந்தும் அசிங்கப்படுத்திய ரஞ்சித்

அட்டகத்தி படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர் பா.ரஞ்சித்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனர் ஆக அவதாரம் எடுத்தார்.பா ரஞ்சித் படம் என்றாலே நிச்சயம் நல்ல கதைக்களத்துடன் மக்களை மகிழ்விக்கும் வண்ணம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அட்டகத்தி படத்தினை தொடர்ந்து மெட்ராஸ் படத்தினை இயக்கினார்.இதில் நடிகர் கார்த்தி மற்றும் கலையரசன் நடித்து அசத்தி இருந்தனர்.இப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

படத்தின் வெற்றிகளை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தினை வைத்து கபாலி மற்றும் காலா என்று வரிசையாக இரண்டு படங்களை இயக்கினார்.இயக்குனர் ஆக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.அண்மையில் ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நேரிடையாக வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தினை இயக்கி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இவரின் அடுத்தப்படமாக சார்பட்டா 2 வர இருப்பதாக போஸ்டர் வெளியாகி இருந்தது.முதல் பாகத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இதனை மகிழ்ச்சியாக ட்வீட் செய்திருந்தார்.இருப்பினும் இரண்டாவது படத்தின் இசையமைப்பாளர் யார் என தகவல் வெளியாகாத நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் அண்மையில் அளித்த பேட்டியில் அவரிடம் இதுகுறித்து கேட்ட பொழுது அவர் கூறியதாவது,சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறாரா என்பது தெரியவில்லை பொறுத்திருந்து பாப்போம் அவர் நல்ல மனத்துக்காரர் என சாதாரணமாக சொல்லி நகர்ந்து சென்றுள்ளார்.

Embed video credits : CINEULAGAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in