The Indian Times

வெளியாகியது வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் TRAILER…. என்னடா பண்ணிவச்சிருக்கீங்க

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் சல்மான் கான்.இவருக்கென ஹிந்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் ஹிந்தியில் பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.தற்போது பல படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் சல்மான் கான்.மேலும் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆவது வாடிக்கையாக உள்ளது.இதனால் அடுத்தடுத்து படங்களில் இடைவிடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழில் தல அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகிய படம் வீரம்.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியையும் வசூலையும் பெற்றது.தற்போது இப்படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளனர்,இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார்.கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் மேலும் நாசர் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார்.ரவி பாசூர் இசையில்,அனல் அரசு சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Advertisement

இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ஹிந்தி ரசிகர்களுக்கு ட்ரைலர் பிடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது என்றே கூறலாம்.ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் இது வீரம் படம் மாதிரி இல்லை அத கலாய்ச்சு எடுத்த மாதிரி இருக்கு என்னங்க இது என புலம்பி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Embed video credits : SALMAN KHAN FILMS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in