The Indian Times

அனைவரும் எதிர்பார்த்த பத்துதல படத்தில் இருந்து வெளியாகிய நீ சிங்கம்தான் முழு வீடியோ பாடல் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன். சிம்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இவர்.பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் இவர் ஆவார்.தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார் சிம்பு .பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.இதனால் இவரை அனைவரும் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைப்பார்கள். அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர். 2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.தற்போது இவர் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து உள்ளார் .இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளார்.

Advertisement

இப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது.தற்போது இப்படத்தில் இடம்பெற்ற நீ சிங்கம்தான் என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்பாடல் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இது பாடல் இல்லை சிலம்பரசன் ரசிகர்களின் எமோஷன் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்தளவுக்கு ரசிகர்களிடம் இப்பாடல் அவர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

Embed video credits : SONY MUSIC 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in