The Indian Times

KGF கதாநாயகன் ராக்கி பாயின் சிறுவயது புகைப்படங்கள் இதோ

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ்.இவர் முதன்முதலில் ஜம்படா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.யாஷ் முதல் முறையாக கதாநாயகனாக நடித்த படம் 2008 ஆம் ஆண்டு வெளியாகிய ராக்கி படம் ஆகும்.

அதன்பின் தொடர்ச்சியாக கன்னடத்தில் கதாநாயகனாக பல படங்களை நடித்து வந்தார்.இவர் நடிப்பில் வெளியாகிய பல படங்கள் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றது.இருந்தாலும் இவருக்கான சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

Advertisement

அதற்காக தான் கடுமையாக போராடி வந்தார்.இந்த போராட்டத்திற்கு பலனாக தான் கேஜிஎப் படம் இவர் கைக்கு வந்தது.இப்படத்தில் நடித்து உலக சினிமா வரை மாபெரும் உச்சம் அடைந்தார் யாஷ்.

இப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினை பெற்று இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை கூட்டியது.இறுதியாக இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகி பலத்த வரவேற்பினை பெற்று புகழின் உச்சத்துக்கே யாஷை கொண்டு சென்றுவிட்டது.

5 மொழிகளில் வெளியாகிய இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளி கன்னடத்தில் முதல் 1000 கோடி வசூலை பெற்ற படமாக மாறியது.தற்போது யாஷ் தனது அடுத்த பட வேலைகளை பார்க்க தொடங்கியுள்ளார்.

இப்படமும் பாண் இந்திய படமாக இருக்கும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்போது கேஜிஎப் படம் வெளியாகி ஒரு வருடங்கள் கடந்த நிலையிலும் நடிகர் யாஷ்-ன் அடுத்த படம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியே வராதது ரசிகர்களுக்கு சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் அவரது அடுத்தப்பட அப்டேட்டிற்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்

Advertisement

இந்நிலையில் நடிகர் யாஷ்-ன் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.இந்த புகைப்படங்களை தற்போது ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in