The Indian Times

இரண்டாவது பிறந்த பெண் குழந்தையை தூக்கி கொஞ்சும் நடிகர் கின்னஸ் பக்ரு

டிஷ்யூம் படத்தில் அமிதாப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கின்னஸ் பக்ரு.இப்படத்தில் இவரின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார் பக்ரு,மலையாள நடிகர் ஆன இவர் முதன் முதலில் 1986ஆம் ஆண்டு மலையாள படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகி இன்று தனது கடின உழைப்பினால் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உருமாறியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

திறமைக்கு உயரம் தேவை இல்லை என நிரூபித்தவர் கின்னஸ் பக்ரு.இவர் டிஷ்யூம் படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்துவிட்டார்.அற்புத தீவு,தலையெழுத்து,காவலன் 7ஆம் அறிவு படத்திலும் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.மேலும் அண்மையில் பிரபுதேவா நடிப்பில் வெளியான பகீரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் கின்னஸ் பக்ரு.மேலும் இவர் மலையாளத்தில் ஒரு படத்தினை இயக்கியும் உள்ளார்.

Advertisement

இவருக்கு 2006ஆம் ஆண்டு திருமணம் ஆகியது.ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக மீண்டும் அழகிய பெண்குழந்தை பக்ருவுக்கு பிறந்துள்ளது.ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தனது மகளை தூக்கி கொஞ்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in