The Indian Times

ஹிந்தியில் பேசாதே தமிழில் பேசு என மனைவியை கூறிய AR ரஹ்மான்

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருபவர் ஏஆர் ரஹ்மான்.இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.இவர் இசைக்கேனே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed video credits : Cinema vikatan

தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான்.இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.

அண்மையில் இவர் இசையில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இவர் இசையில் மீண்டும் பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ரஹ்மான் தனது மனைவியுடன் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அங்கு தனது மனைவியை பேச வைத்துள்ளார்.அவரது மனைவி பேச போகும் பொழுது உடனே ரஹ்மான் ஹிந்தியில் பேசாதே தமிழில் பேசு என கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழுக்கு ரஹ்மான் கொடுக்கும் முக்கியத்துவத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in