The Indian Times

இப்படி படம் எடுத்து எங்க உயிரை வாங்காதீங்க… இதெல்லாம் ஒரு படமா.. கொலை படத்தை கடுமையாக விமர்சனம் செய்த BLUESATTAI மாறன்

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.தற்போது கொலை படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படத்தினை கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார் மாறன்,விமர்சனத்தில் அவர் கூறியதாவது,இதெல்லாம் ஒரு படமா முழுக்க முழுக்க கிராபிக்ஸ் ல எடுத்திருக்காங்க, சென்னைன்னு சொல்லிட்டு வேறே ஊர் காமிக்கிறாங்க ,எப்பொழுதாவது தான் தமிழ் பேசுறாங்க ,ஹீரோவா பார்த்தா சிரிப்பு தான் வருது,இப்படி படம் எடுத்து எங்க உயிரை வாங்காதீங்க என கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Embed Video Credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in