The Indian Times

செண்பகம் பாடலை ராமர் பாட… ராமராஜனுக்கு பால் கறக்க சொல்லிக்கொடுத்த பாலா… ஒரே கூத்துதான் KPY CHAMPIONS -ல

விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள்.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.விஜய் தொலைக்காட்சியில் உள்ள பல நகைச்சுவை நட்சத்திரங்களும் இதில் கலந்துகொண்டு தங்களது நகைச்சுவை திறமையால் மக்களை வெகுவாக சிரிக்க வைக்கின்றனர்.நிகழ்ச்சியில் நடுவராக மதுரை முத்து,தாடி பாலாஜி,ஸ்ருதிகா மற்றும் ரேஷ்மா ஆகியோர் உள்ளனர்.

இந்த வாரம் சிறப்பு விருந்தினராக ராமராஜன் கலந்துகொண்டுள்ளார்.இதில் விஜய் டிவி ராமர் செண்பகமே பாடலை பாடவே பாலா ராமராஜனுக்கே பால் கறக்க சொல்லி கொடுத்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ராமராஜனுக்கே ட்ரைனிங் கொடுக்கீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்,இறுதியாக பேசிய ராமராஜன் செண்பகமே பாடலை ராமர் தியாகராஜார் பாகவதர் பாடிய மாறி ஆக்கிட்டேங்க என கூறி கிண்டலடித்துள்ளார்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in