The Indian Times

கண்ணம்மாவை காட்டில் விட்டு சென்ற பாரதி.. கண்ணம்மாவிடம் தவறாக நடக்க முயலும் பாரதி நண்பன்.. பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்து ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் சித்ரா, ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறி அவர் வீட்டுக்கு செல்கிறார்.

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் பாரதி கண்ணம்மாவை காட்டுக்குள் விட்டு செல்கிறார்,காட்டில் வழிதெரியாமல் அலையும் கண்ணம்மாவிடம் பாரதியின் நண்பர் தவறாக நடக்க முயல்கிறார்.இதனால் கண்ணம்மா அங்கிருந்து தப்ப முயல்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களுக்கு பாரதி மேல் கடும் கோவத்தினை ஏற்படுத்தியுள்ளது.பாரதி நீங்க எல்லாம் மனுஷனா என அவரை கிழித்தெடுத்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in