The Indian Times

பாக்கியா கார் ஓட்டுவதை ஆச்சரியமாக பார்த்து அவர் காரிலேயே விழ போகும் கோபி.. பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் பாக்கியா கார் ஓட்டுவதை பார்த்து கோபி திகைத்து போய் நிற்கிறார்,மேலும் பாக்கியா காரை கொண்டு கோபி மேல் இடிக்க போவது போல செல்வதும் கோபி பயந்து ஓடுவதும் ரசிகர்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பார்த்து கோபி எங்க பாக்கியா கார்ல அடிபட்டுவிட போறீங்க என கேலி செய்து நக்கலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in