The Indian Times

அரபிக்குத்து பாடலுக்கு தளபதி போல ஆட்டம் போட்ட பாலிவுட் நடிகை KATRINA KAIF…

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை கத்ரினா கைப்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே அனைத்து மொழி சினிமாவிலும் உள்ளது.பல நடிகர்களையும் இவருடன் நடிக்கமாட்டோமா என்று ஏங்க வைத்தவர் இவர்.தற்போது இவர் தளபதி விஜய் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை ரசிகர்கள் வெகுவாக ட்வீட்டரில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகிய படம் பீஸ்ட்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ஜொனிடா காந்தி மற்றும் அனிருத் இணைந்து பாடிய அரபிக்குத்து பாடல் பெருமளவு ஹிட் அடித்தது.பட்டிதொட்டி எங்கும் பெருமளவு வைரலாகியது.பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்து அசத்தி வருகின்றனர்.தற்போதுவரை யூடியூபில் பார்வையாளர்கள் வீடியோவுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர்.

Advertisement

தற்போது இப்பாடலுக்கு நடிகை கத்ரினா கைப் நடனமாடியுள்ளார்.இந்த வீடியோவை தளபதி விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.வீடியோவில் அரபிக்குத்து பாடலுக்கு கத்ரினா குழந்தைகளுடன் மிரட்டல் நடனம் போட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in