The Indian Times

வஞ்சத்தினை நேருக்கு நேர் சந்திக்கும் குந்தவை… பொன்னியின் செல்வன் PROMO

தமிழ் சினிமாவே தற்போது காத்திருக்கும் படம் என்று கூறினால் அது பொன்னியின் செல்வன் தான்.தமிழர்களின் பெருமையை உலகெங்கும் பறைசாற்ற போகும் காவியம்.பல மெனெக்கடல்கள் போராட்டங்களை தாண்டி இயக்குனர் மணிரத்தினம் இந்த பிரம்மாண்ட காவியத்தினை படைத்துள்ளார்.இது மணிரத்தினத்தின் நீண்ட நாள் கனவு படம் அப்போ இப்படத்தினை எப்படி வடிவமைத்திருப்பார் என்று நினைக்கும் பொழுதே படத்தின் எதிர்பார்ப்பு எகிறிவிடுகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

மணிரத்தினத்தின் சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனத்துடன் இணைத்து இப்படத்தினை இரண்டு பாகங்களாக தயாரித்துள்ளார்.இப்படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், நாசர், பார்த்திபன்,ரகுமான்,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளது.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் இரண்டாவது பாகம் இப்படம் வெளியாகி 9 மாதங்களில் வெளியாகும் என கூறியுள்ளார்

Advertisement

இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.தற்போது இப்படத்தின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு,ப்ரோமோவில் குந்தவையும் நந்தினியின் நேருக்கு நேர் சந்தித்து கொள்கின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது ப்ரோமோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Embed video credits : LYCA PRODUCTION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in