The Indian Times

விஜய் தேவர்கொண்டா உடன் ROMANCE-ல் பட்டையை கிளப்பும் சமந்தா… குஷி படத்தின் SECOND SINGLE வெளியாகியது

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர்நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் தற்போது நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனதினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .அண்மையில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.தற்போது விஜய் தேவர்கொண்டாவுடன் குஷி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது,இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இப்பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்,செம்ம மெலடியாக உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Embed Video Credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in