The Indian Times

கோதை நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்கும் எதிர் நிறுவனம்… யாருக்கு ஆதரவு அளிப்பார் தமிழ்? தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது நாடகத்தில் தமிழ் கோதையை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார்.தேர்தல் முடிவுகளில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் தமிழை விட கோதை அதிக வாக்குகளில் முன்னிலையில் இருக்க,இறுதிக்கட்ட தேர்தல் முடிவுகளை அறிவிக்க வருகின்றனர்.இதனால் தமிழ் பெரும் பரபரப்பில் உள்ளார்,மேலும் ரசிகர்களும் பெரும் பரபரப்பில் யார் வெற்றிபெற போவது என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.தமிழ் 146 வாக்குகளை பெற்று கோதையை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்,இதனால் தமிழ் தரப்பினர் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்,

Advertisement

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் நிறுவனம் ஒன்று கோதை நிறுவனம் தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என கூறுகிறது,மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் கோதை,தன்னால் தர முடியாது எனவும் கூறுகிறார்,இதனால் அம்மாவுக்கு ஆதரவு அளிப்பாரா அல்லது நியாயத்திற்கு ஆதரவு அளிப்பாரா என பெரும் குழப்பம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in