The Indian Times

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் குடும்ப புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன்.பா ரஞ்சித் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் சந்தோஷ் நாராயணன்,

இப்படத்தில் இவர் இசையில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மாபெரும் வரவேற்ப்பினை ரசிகர்களிடம் பெற்று முதல் படத்திலேயே முன்னணி இசையமைப்பாளர் என பெயர்பெற்றவர் இவர்.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து தமிழ் பல படங்களுக்கும் இசையமைக்க தொடங்கிவிட்டார்,இவர் இசையில் பல ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

தமிழ் சினிமாவில் இருந்து தற்போது இவர் தெலுங்கு சினிமாவிலும் இசையமைக்க தொடங்கியுள்ளார்,அதன்படி அண்மையில் நடிகர் நானி நடிப்பில் வெளியாகிய தசரா படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்,

இப்படத்தினை தொடர்ந்து மேலும் நிறைய தெலுங்கு படங்களுக்கு இசையமைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்போது அடுத்தடுத்த புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக பட்டையை கிளப்பி வருகிறார்,மேலும் இவரை போல இவரது மகளையும் இசைத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவரது மகள் தீ பாடகியாகவும் சினிமாவை கலக்கி வருகிறார்.

Advertisement

இவர்களின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in