The Indian Times

என் குடும்பத்து மேலயாடா கைவைக்கிறீங்க வாங்கடா இப்போ – LEO ட்ரைலர் வெளியாகியது

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து இயக்கிய விக்ரம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நடிகர் விஜயை வைத்து லியோ படத்தினை இயக்கியுள்ளார்,இப்படம் விரைவில் வெளியாகியுள்ளது.படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகிறது.இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்,கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்,இசையமைப்பாளராக அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி பெருமளவு ஹிட் அடித்துள்ளது.இந்நிலையில் இப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ட்ரைலர் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்,அந்தளவுக்கு ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in