The Indian Times

TTF வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும்.. நீதிபதி பரபரப்பு கருத்து

இளைஞர்கள் பலரும் யூடியூப் சேனல் தொடங்கி அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம் சிலர் சினிமா வரை சென்றுள்ளனர்.சிலர் நல்ல வழியில் சென்றாலும் சிலர் தவறான உதாரணமாக மாறிவிடுகிறார்கள் இங்கு தான் பிரச்னையே உருவாகிறது.முன்னதாக யூடியூபில் பப்ஜி விளையாடி ஆபாசமாக பேசிய மதன் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் இருந்தார்.அவர் தற்போது சிறையில் இருந்து பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த்துள்ளார்.இந்நிலையில் தற்போது புதியதாக TTF வாசன் என்பவர் ஆபத்தான முறையில் பைக்குகளை ஒட்டி இளைஞர்களையும் ஆபத்தில் தள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement

அண்மையில் வாசன் பைக்கில் அதிகவேகமாக சென்றதாகவும் அதனால் விபத்துகள் நேரும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது அதிவேகத்தில் சாகசத்தில் ஈடுபட்ட அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது,இதில் வாசன் வலது கை முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது.உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்,தற்போது போலீசார் வாசனை கைது செய்துள்ளனர் ஏற்கனவே 15 நாள் நீதி மன்ற காவலில் இருந்த வாசனை தற்போது மேலும் 15நாளில் புழல் ஜெயிலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கேட்டு வழக்கு தொடுத்திருந்த நிலையில் அதனை தள்ளுபடி செய்துள்ளார் நீதிபதி மேலும். டிடிஎப் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் மேலும் அவரின் பைக்கை எரித்து விட வேண்டும் என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார், மேலும் 3 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்ததால் அவர் உயிர் தப்பியது ,இவரை பின்தொடருபவர்கள் பலர் அதிகமாக பைக் ஓட்டுவதாகவும்.திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் காவல் துறை ஜாமீனுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in