The Indian Times

Lady Gettup ல் அசத்திய புகழ்! விழுந்து விழுந்து சிரித்த விவேக் | LOL Enga Siri Paappom Teaser

தமிழ் சினிமாவின் 10 காமெடி நடிகர்களை வைத்து உருவாகியுள்ள சீரிஸ் LOL எங்க சிறி பாப்போம். இது மிர்ச்சி சிவா , மறைந்த நடிகர் விவேக் அவர்கள் , நடிகை ஆர்த்தி , நடிகர் பிரேம்ஜி , விஜய் டிவி புகழ் , சதீஷ் , பவர் ஸ்டார் என பல காமெடியர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி. அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறது இந்த நிகழ்ச்சி. இதில் 10 காமெடி நடிகர்கள் perform செய்ய 2

ஜட்ஜஸ் இருக்கின்றனர். விவேக் அவர்களும் சிவாவும் தான் அந்த ஜெட்ஜெஸ் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கிறது. வருகிற ஆகுதி 27 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. விவேக்

Advertisement

அவர்களின் இறப்பிற்கு பிறகு முதல் முதலில் வெளியாகும் சீரிஸ். இதை தொடர்ந்து அவர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் முதல் டீசர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து தற்போது புகழ் நடித்த டீசர் வெளியாகியுள்ளது. இதில் மிமிகிரி செய்து அசத்தியுள்ளார் புகழ்.

https://www.youtube.com/watch?v=dZZEyCAx56U

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in