The Indian Times

NEE INDRI NAANA Video Song | Adangathey | GV Prakash | Sarath Kumar

இசையமைப்பாளராக பல நெஞ்சங்களில் இடம் பிடித்து இந்த நடிகராக கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் முதல் படத்திலேயே ஹிட்டான பாடல்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு பொல்லாதவன் , ஆயிரத்தில் ஒருவன் , மதராசபட்டினம் , ஆடுகளம் , தெய்வ திருமகள் என பல படங்களில் ஹிட்டான

Advertisement

பாடல்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அதன் பிறகு சிறந்த இசையமைப்பாளராக காணப்பட்டார் இவர். பிறகு இசையமைப்பாளராக மட்டுமே இருந்த இவர் போக போக ஹீரோவாகவும் அவதாரம் எடுக்க துவங்கினார். டார்லிங் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் பென்சில் , திரிஷா இல்லனா நயன்தாரா , செம்ம , குப்பத்து ராஜ போன்ற படங்களில் ஹீரோவாக கலக்கினார்.

Advertisement

இருந்தாலும் இசையமைப்பாளராக வெற்றி பெற்ற ஜி.வி.பிரகாஷ் , ஹீரோவாக இன்னும் மக்கள் மனதில் இடம்பிடிக்க வில்லை. இவர் இறுதியாக நடித்த திரைப்படம் வணக்கம் டா மாப்ளே இந்த படமும் பெரியளவில் இவருக்கு வெற்றியை தேடி தரவில்லை. இந்நிலையில் தற்போது அடங்காதே என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது அந்த படத்தின் நீ இன்றி நானா என்ற video song வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in