The Indian Times

படம் ரொம்ப மெதுவா போகுது… சொல்லிக்கிற அளவுக்கு இல்லை… “மாமன்னன்” PUBLIC REVIEW

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் வலம் வருபவர்.தயாரிப்பாளர் ஆன இவர் முதல் முறையாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கினார் உதயநிதி.பல வெற்றி படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவை கலக்கியுள்ளார்.தற்போது அரசியலில் களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்று ஆல் ரவுண்டர் ஆக கலக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து அண்மையில் வெளியாகிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த உதயநிதி தற்போது சீரியசான கதாபாத்திரங்களில் களம் இறங்கி வெற்றியும் கண்டு வருகிறார்.அதேபோல் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தினை தயாரித்து நடித்தும் உள்ளார்இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertisement

இப்படத்தினை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் ரொம்ப நல்லா இருக்கு,இப்போ உள்ள இளைஞர்களுக்கு கட்டாயம் பிடிக்கும் என படத்திற்கு பாசிட்டிவ் கருத்துக்களை கொடுத்து வருகின்றனர்.இருப்பினும் சிலர் படத்தில் திரைக்கதை சரியில்லை மெதுவாக நகருகிறது,சொல்லிக்கிற அளவுக்கு இல்லை என படம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.தற்போது இப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in